மேஷம் முதல் கன்னி வரை ராசிபலன்...! 

மேஷ ராசி நேயர்களே...!

வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்தடையும். குடும்பத்தினருடன் நன்கு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

ரிஷப ராசி நேயர்களே..! 

வெளி நபர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் இருந்து பணத்தை பெற வேண்டிய சூழல் ஏற்படும். திடீர் என பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை கிடைக்கும். பல பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். 

கடக ராசி நேயர்களே...!

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய சிந்திப்பீர்கள். சகோதரங்களால் ஆதாயம் உண்டு.

சிம்ம ராசி நேயர்களே..!

பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்ள அறிவுரை கூறுவீர்கள். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக சாதித்துக் காட்டுவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

கன்னி ராசி நேயர்களே..! 

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பக்கம் ஆதரவு கொடுப்பார்கள். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடந்து கொள்வார்கள்.