மேஷம் முதல் கன்னி  வரை ராசிபலன்..! 

மேஷ ராசி நேயர்களே...!

நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடித்து காட்டக்கூடிய நாள். பழைய பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

ரிஷப ராசி நேயர்களே..!

மனசாட்சி படி செயல்பட்டு மக்களிடம் நல்ல இடத்தை பெறுவீர்கள் கேட்ட இடத்தில் இருந்து உங்களுக்கு தேவையான பணம் வந்து சேரும். தள்ளிப்போன காரியங்கள் ஒவ்வொன்றாக முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் நல்லபடி முடிக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...! 

குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். செலவுகளும் பயணங்களும் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். சாமர்த்தியமாக சமாளிக்கக் கூடிய திறமை உங்களுக்கு உண்டு.

சிம்மராசி நேயர்களே...!

இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். சில வேலைகளை மிக விரைவாக முடித்து காட்டும் திறமை இன்று வெளிப்படும்.

கன்னி ராசி நேயர்களே..!

உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உங்களுக்கு உருவாகும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய வரும்.