வடிவேலு என்ட்ரி கொடுத்த "உச்சகட்ட மீம்ஸ்"..! சிரிச்சு சிரிச்சு.... அட போங்கப்பா..! பிகிலுக்கு சோதனை... ரசிகர்களுக்கு வேதனை..! 

தீபாளையையொட்டிஇன்று வெளியான பிகில் படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை  கொடுத்து உள்ளது. அதனை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில்  #BigilDisaster என படதோல்வியை உணர்த்தும் வகையில் ட்வீட் செய்து வருகின்றனர். இந்த ட்வீட் தான் தற்போது இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பீகில் படத்தை வைத்து, பல்வேறு மீம்ஸ் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில் குறிப்பாக அதிகமாக பகிரப்பட்டு வரும் மீம்ஸ் இதுதான்...

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கான ஆடியோ லாஞ்ச் புரோகிராம், செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் எதிர்பார்த்தது போலவே அரசியல் பேசி அனைவரையும் தெறிக்க விட்டார் விஜய். பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் அடித்தவர், லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதற்கு மிகுந்த ஆதங்கம் தெரிவித்தார். அரசியலில் புகுந்து விளையாடுங்க ஆனா, அரசியல் பார்க்காதீங்கன்னு ரசிகர்களுக்கு தடாலடி அறிவுரை கூறிய விஜய்,  சுபஸ்ரீ விவகாரத்தில் யாரை எங்க உட்கார வைக்கனுமோ, அவங்களை அங்க உட்கார வச்சா நல்லா இருக்கும் என கருத்து தெரிவிக்க ரசிகர்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது. 

இந்த நிலையில் இன்று வெளியான பிகில் திரைப்பட சிறப்பு காட்சிக்காக இரவு முதலே காத்திருந்த விஜய் ரசிகர்கள் படத்தை திரையிட தாமதம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாலை 4 மணிக்கு படம் திரையிடப்பட்டது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடித்து ஆராவாரமா படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஏன்னா, மேடையில் விஜய் பேசினா அரசியலை, திரையில் எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

படத்தோட முதல் பாதி நல்லவே இல்லைன்னு, ஒரே காட்சிகள் திரும்ப, திரும்ப வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் படுமோசமான விமர்சனங்கள் உலா வருது.இந் நிலையில் வடிவேலு மீம்ஸ் முதல் பல்வேறு விதமான மீம்ஸ் வரைக்கும் சமூகவலைதளையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் என்னடா இப்படி ஒரு சோதனை என புலம்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான படம் என்றால் அது பிகில் என செய்திகளும் பரவி வருகின்றன.

மேலும் பைரவா சுறா புலி பிகில்.. இதில் எந்த படம் மிக மோசமாக உள்ளது என்ற மீம்ஸ் போட்டு கேள்வியும் எழுந்துள்ளது. மொத்தத்தில் பிகில் படத்தை வைத்து பல்வேறு எதிர் விமர்சனங்கள்  தொடர்ந்து பரவி வருகிறது.