மருத்துவ காப்பீடு - முக்கிய உத்தரவு..! மக்கள் மகிழ்ச்சி..!

முதலமைச்சர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் தொடர்பாக சக்திவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் இன்று தமிழக அரசுக்கு சரமாரி கேள்வியை எழுப்பி உள்ளனர்.

அதன் படி, முதலமைச்சர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? காப்பீட்டு தொகை சிகிச்சை பட்டியலில் அனுமதிக்கப்பட்ட நோய்கள் எவை எவை? மருத்துவ செலவுக்கான உச்ச வரம்பு ஏதும் உள்ளதா?  என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்ட தொகையை அதிகரிக்க கோரிய இந்த வழக்கின் விசாரணையில், 8 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக, சக்திவேல் தொடர்ந்த இந்த வழக்கில் முக்கிய 
விஷயமாக, சிகிச்சைக்காக 30% மட்டுமே காப்பீட்டு தொகையாக வழங்கப்படுகிறது. கஜா பாதிப்புக்கு பின் லிஸ்டில் சேர்க்கப்பட்ட நோய்கள் எவை எவை..? அதற்காக மருத்துவ காப்பீட்டுக்கான தொகையை அதிகரித்து உள்ளதா தமிழக அரசு ? என பல்வேறு கேள்விகள் அடங்கிய இந்த வழக்கு விசாரணையில் இருந்தது.

இந்த நிலையில் தான்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்து, 8 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.