எம்பிஏ படிக்க முடியாத நிலையில் டீக்கடை வைத்து தொழிலதிபராக உயர்ந்த பிரபுல் பில்லோர் புதிதாக மெர்சிடஸ் பென்ஸ் கார்
'எம்பிஏ சாய் வாலா' நிறுவனத்தை உருவாக்கியவர் பிரபுல் பில்லோர். அகமதாபாத் நகரை சேர்ந்த விவசாயியின் மகனான பிரபுல் பில்லோர் அகமதாபாத் ஐஐடி நிறுவனத்தில் சேர்ந்து MBA படிக்க விரும்பினார். இதனால் CAT தேர்வை மூன்று முறை எழுதினார்.
ஆனால், தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததால் எம்பிஏ கனவை கைவிட்டு, 2017ஆம் ஆண்டு டீ விற்பனை தொழிலில் இறங்கினார். தனது கனவுக் கல்லூரியான ஐஐஎம் அகமதாபாத்திற்கு வெளியே ஒரு சிறிய டீக்கடையை ஆரம்பித்தார்.
பின்னர் அந்தத் தொழிலை விரிவாக்கி 'எம்பிஏ சாய் வாலா' என்ற பெயரில் நாடு முழுவதும் பல கடைகளை ஏற்படுத்திவிட்டார். வெற்றிகரமாக தொழிலில் நிரூபித்துக்க காட்டிய பில்லோர் பிரபலமான தன்னம்பிக்கை பேச்சாளராகவும் ஜொலிக்கிறார்.
சமீபத்தில், ரூ.90 லட்சம் மதிப்புள்ள ஆடம்பரமான மெர்சிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்கி இருக்கிறார். தனது குடும்பத்துடன் சென்று புதிய சொகுசு காரை வாங்கிவரும் காட்சியை வீடியோவாக ஆக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதிசயத்தைப் பாருங்க! மஞ்சள் கருவுக்குப் பதில் பச்சை கருவுடன் முட்டையிடும் கோழிகள்!
இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பேர் பில்லோரைப் பின்தொடர்கிறார்கள். இந்த வீடியோ மட்டும் வெளியான இரண்டே நாளில் 20 லட்சம் பேரால் பாக்கப்பட்டுள்ளது. 2.71 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
மெர்சிடஸ் பென் GLE SUV 300D மாடல் காரை பில்லோர் வாங்கியுள்ளார். இது உயர்தர கார்களில் எதிர்பார்க்கப்படும் எல்லா சிறப்பு அம்சங்களுடனும் உள்ளது. கார் வாங்கிய தருணம் சாகச உணர்வைக் கட்டவிழ்த்து விடுவதுதாக உள்ளது என்றும் என்றும் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்துள்ளது என்றும் பில்லோர் தனது இன்ஸ்டாகிராம் பதவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கார் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 225 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.
Paula Hurd: டென்னிஸ் களத்தில் மலர்ந்த காதல்! பில் கேட்ஸின் புதிய காதலி பவுலா ஹர்ட்!
