matured girl and boy can live together said court
வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழலாம் என கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருந்தது
இந்நிலையில், கேரளா ஐகோர்ட் திருமணம் ஆகாமல் இணைந்து வாழும் உறவு முறையில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என தெரிவித்து உள்ளது
திருமணம் செய்துக்கொள்ளும் தகுதியை எட்டாத நிலையில், வயது வந்த ஆணும் பெண்ணும் ஒன்றாக இணைந்து வாழலாம் என ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணின் தந்தை, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இளம் ஜோடியை பிரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த நீபாதி சிதம்பரேஸ் மற்றும் கேபி ஜோதிந்திரநாத் மனுவை தள்ளுபடி செய்தனர்
இது குறித்து தெரிவித்த நீதிபதிகள், சமூதாயத்தில் மரபு சார்ந்த பிரிவினருக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், வயது வந்த ஆணும் பெண்ணும் ஒன்றாக இணைந்து வாழ உரிமை உண்டு.
அந்த வாலிபருடன் இணைந்து வாழ பெண்ணுக்கு உரிமை உண்டு என்றும், பின்னர் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.
