Asianet News TamilAsianet News Tamil

மணமகள் இல்லாத திருமணம்..! மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை..!

குஜராத் மாநிலத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு மணப்பெண் இல்லாமல் திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது
 

marriage happend without bride in gujrat
Author
Chennai, First Published May 13, 2019, 6:26 PM IST

மணமகள் இல்லாத  திருமணம்..!   

குஜராத் மாநிலத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு மணப்பெண் இல்லாமல் திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்காந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் அஜய் இவர் மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் அஜய்யின் அண்ணனுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

இந்த திருமணத்தை பார்த்த அஜய் எனக்கும் இதே போன்று செய்து வையுங்கள் என தன் தந்தையிடம் கூறியுள்ளார். இதற்கு பதில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலையில் மிகவும் கவலையுற்ற தந்தை எப்படியாவது தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தார்.

marriage happend without bride in gujrat

அதனால் மணமகள் இல்லாமல் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்து தன் மகனை மகிழ்விக்க முடிவு செய்துள்ளார் அப்பா. அதன்படி மனவளர்ச்சி குன்றிய  27 வயதான தன் மகன் அஜய்க்கு ஏற்றவாறு மணமகள் கிடைப்பாரா என தேடியுள்ளார். இருந்தபோதிலும் மனவளர்ச்சி குன்றிய உள்ளதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட தந்தை மற்றும் உறவினர்கள் அஜய்யின் ஆசையை நிறைவேற்ற திருமண நிகழ்வு போன்றே விழா எடுத்தனர்.

குஜராத்தி முறைப்படி பேண்டு வாத்தியங்களுடன் 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் மத்தியில் மணமகனை குதிரையில் அழைத்து வந்தனர். அஜய்யும் மனதளவில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios