marchurai ice is using
கோடைக்காலம் நெருங்கியதால்,மக்கள் அதிகமாக குளிர்பானங்களை அருந்த விருப்பம் தெரிவிக்கின்றனர். அதிலும் சமீபத்திய காலத்தில் சர்பத் என்ற பானம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் அதில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் பிணவறைக்கு பயன்படுத்தும் ஐஸ் கட்டிகள் என கொல்கத்தா மாநகராட்சி மேயர் அதின் கோஷ் உறுதி செய்துள்ளார்.
அதாவது கொல்கத்தாவில் உள்ள புதிய மார்கெட் பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்ட, கொல்கொதா மாநகராட்சி மேயர், பிணவறைக்கு பயன்படுத்தப் படும் ஐஸ் கட்டிகள் தான் சர்பத் குளிர்பானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை உறுதி செய்தததையடுத்து, மனசாட்சியே இல்லாமல் இந்த செயலில் ஈடுபட்ட 1௦ வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்
இதில் அதிர்ச்சி தரும் கூடுதல் விவரம் என்னவென்றால், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு வியாபாரிகள் இந்த வகையான ஐஸ் கட்டிகளை உபயோகம் செய்கிறார்கள் என்பதே. இதற்கு காரணம் ஐஸ்கியூப்ஸ் விலை அதிகம் என்பதால், பிணவறை ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
