சென்னையில் கொடூரத்தின் உச்சம்..! மூடப்படும் மேன்ஷன்கள் .! 

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் சென்னையில் பல்வேறு மேன்ஷன்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன.

சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கும் விடுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால், மேன்ஷன்கள் மூடப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள முகமது அலி என்ற தெருவில் மட்டும் சுமார் 350க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இந்த பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கடந்த வாரம் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், தற்போது இந்த வாரம் 7000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் வராத நிலையில் பல மேன்ஷன்கள் மூடப்பட்டு உள்ளது. 

கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே ஓஎம்ஆர் இல் உள்ள ஐடி நிறுவனங்கள், ஹோட்டல்கள் முடங்கிப்போய் உள்ளது. இந்த நிலையில் வெளி ஊரிலிருந்து பிழைப்புக்காக வந்து மேன்ஷனில் தங்கியிருக்கும் இளைஞர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஒரு சில பள்ளிகள் கூட தண்ணீர் தட்டுப்பாட்டால் அவ்வப்போது மாணவர்களை முன்கூட்டியே வீட்டிற்கு அனுப்பும் நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.