ஐந்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு இடையே சந்தேகத்தின் பேரில்   ஏற்பட்ட சண்டையின் காரணமாக, மனைவியை பேஸ்புக் நேரலையில் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

பங்களாதேஷில் உள்ள பராகிபூர் அடுத்து உள்ளது பெனி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த புகியான்-தகிமா அக்தர் தம்பதியினர், கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மகிழ்ச்சியாக சென்ற இவர்களின் குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே வேறு ஒரு நபரால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த கணவன் புகியான், மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ மூலம் "ஒரு நபரால் எங்க குடும்பத்தின் மொத்த சந்தோஷமும் போய்விட்டது எங்கள் குடும்பமே அழிந்து விட்டது எனக் கூறி தன்னுடைய மனைவியை துடிதுடிக்க இரும்புக் கம்பி கொண்டு அடித்து கொலை செய்கிறார்.

இந்த நபர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சைக்கோ கணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அதன் காரணமாக மனைவியை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது தன்னுடைய அம்மா இறந்து விட்ட நிலையில் தந்தையும் சிறைக்கு சென்ற நிலையில் எட்டு வயதில் குழந்தை அனாதையாக உள்ளது.