சாலையை கடக்கும் பெரியவர் மீது மோதிய லாரி..!

நாகை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற ஒரு பெரியவர் மீது லாரி மோதியா விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தரங்கம்பாடி அருகே உள்ளது அபிஷேக கட்டளை என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் தனபால் என்பவர் இன்று சாலையின் இடப்புறம் இருந்து வலப்புறமாக கடக்க முயற்சி மேற்கொண்டார்.அப்போது இருபுறமும் வரும் வாகனத்தை சற்று கூட கவனிக்காமல் திடீரென சாலையை கடக்க ஓடி செல்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத லாரி ஓட்டுனர் அவர் மீது மோதி பின்னர் லாரியை நிறுத்தினார். இதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார் 58 வயதான தனபால்.

இந்த காட்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போது சாலையை கடக்க முயன்றாலும் இருபுறமும் கவனித்து செல்வது நல்லது என்பதை இந்த வீடியோ மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.