Asianet News TamilAsianet News Tamil

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா.. 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி.. தனியார் நிறுவனங்களுக்கு திடீர் உத்தரவு

மகாராஷ்ராவில் திரையங்குகள் இனி 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Maharashtra Private offices, theatres to operate at 50% capacity
Author
Maharashtra, First Published Mar 19, 2021, 5:25 PM IST

மகாராஷ்ராவில் திரையங்குகள் இனி 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை உருவாவதை தடுக்கவேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் 23,179 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Maharashtra Private offices, theatres to operate at 50% capacity

மிக அதிகபட்சமாக நாக்பூரில் 3,405 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு தற்போது முழுஊரடங்கு அமலில் உள்ளது. தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரவு நேர ஊடரங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மகாராஷ்டிராவில் 1,54,036 கொரோனா நோயாளிகள் உள்ளன. இது நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளில் 60 சதவீதமாகும்.

Maharashtra Private offices, theatres to operate at 50% capacity

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையங்குகளில் இனி 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திரையங்குகள் மற்றும் நிகழ்ச்சி அரங்குகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அனைத்து தனியார் அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios