Asianet News TamilAsianet News Tamil

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் தாயார் கொரோனாவுக்கு பலி.!! இவரைத் தொடர்ந்து மதுரையில் பலி எண்ணிக்கை 2 ஆனது

மதுரைமீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் 70 வயது தாயார் கொரோனாவுக்கு பலியானார்.மதுரையில் இது 2வது பலி. இவருக்கு யாரிடம் இருந்து தொற்று வந்தது என்பது தெரியவில்லை. ஏற்கனவே சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தத்தனேரி மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Madurai Meenakshi Amman Temple Butter Mother Kills Corona Madurai's death toll was 2
Author
Madurai, First Published Apr 24, 2020, 11:19 PM IST

T.Balamurukan

மதுரைமீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் 70 வயது தாயார் கொரோனாவுக்கு பலியானார்.மதுரையில் இது 2வது பலி. இவருக்கு யாரிடம் இருந்து தொற்று வந்தது என்பது தெரியவில்லை. ஏற்கனவே சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தத்தனேரி மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் குடும்பம் மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.அவர்கள் அனைவரும் தொடர் சுகாதாரத்துறை கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

Madurai Meenakshi Amman Temple Butter Mother Kills Corona Madurai's death toll was 2

ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் ஆகமவிதிப்படி தினமும் ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் பட்டர்கள் கோவிலுக்கு வந்து சென்று தான் இருக்கிறார்கள். கோவில் பட்டர்கள், கோவில் பணியாளர்கள், கோவில் காவல் நிலைய போலீசார் மட்டுமே அங்கு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் 70 வயதான தாயாருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் அவருக்கு கொரானா  எப்படி பரவியது என்று தெரியவில்லை.
மீனாட்சியம்மன் கோவில் பட்டர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளார். அவர் வழியாகவே கொரோனா தொற்று பரவி இருக்க கூடும் என உறுதி செய்த மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், சம்பந்தப்பட்ட பட்டர் சென்று வந்த மீனாட்சி அம்மன் கோவில் முழுவதுமாக கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

Madurai Meenakshi Amman Temple Butter Mother Kills Corona Madurai's death toll was 2

சம்பந்தப்பட்ட பட்டர் கோவிலுக்கு வந்த பொழுது சக பட்டர்கள் மற்றும் பணியாளர்கள் அவருடன் பழகியுள்ளதால் ஒட்டுமொத்தமாக அனைத்து பட்டர்களின் குடும்பங்களும் வரவழைக்கப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.கோவில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளதால் மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் 54 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படை போலீசார் 32 பேர் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஏற்பாட்டில் கோவில் வாசலில் வைத்து பரி சோதனை நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட பட்டரின் வீடு அமைந்துள்ள பகுதிகள் முழுவதும் லாக் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios