Lunar Eclispe 2022: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ம் தேதி 2022 அன்று ரிஷப ராசியில் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நீடிக்கும்.
2022ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் மே 16 ம் தேதி 2022 அன்று ரிஷப ராசியில் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நீடிக்கும்.
சந்திர கிரகணம்:

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சந்திர கிரகணம் நிகழ்வு எங்கு தெரியும்?
இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் , தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும். பொதுவாக கிரகணம் நிகழும் போது, அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்படும்:

இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளன. அதில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள். இதில், ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து, மே 16ம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும்.
இந்த மாதம் நான்கு கிரகங்கள் ராசி மாற்றம்:
அதேபோன்று, இந்த மாதத்தில் நான்கு கிரகங்கள் அதாவது சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ராசியை மாற்றப் போகிறார்கள். இந்த சந்திர கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த நாளில் எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம்:

2022 நவம்பர் 8 அன்று இந்த ஆண்டின் இரண்டாவது அல்லது கடைசி சந்திர கிரகணம் நிகழும். இந்த கிரகணம் மாலை 05:28 மணிக்கு துவங்கி காலை 07:26 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவின் சில பகுதிகளில் தெரியும்.
கிரகத்தில் இருந்து விடுபட என்ன செய்ய கூடாது:
ஜோதிடர்கள் கணிப்பின் படி, கிரகத்தின் போது கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர்.கிரகணத்தின் போது உண்பது மற்றும் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் தையல், வெட்டுதல், சுத்தம் செய்தல் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவது கிரகண காலத்தில் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை.
கிரகத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்:

இந்த கிரகணத்திற்குப் பிறகு, ஸ்நானம் செய்வதும் பின்னர் தானம் செய்வதும் முக்கியம், இதனால் கிரகணத்தின் எதிர்மறை பாதிப்புகள் தவிர்க்கப்படலாம். கோவில் அல்லது பூஜை அறையின் கதவுகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.
கிரகத்தில் இருந்து விடுபட சுப்ரபாதம், விநாயகர் துதி ஆகியவை பாடலாம். புண்ணிய நதிகளில் ஸ்தானம் செய்யலாம். தானங்கள் வழங்கலாம். அப்படி செய்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு 100 மடங்கு அதிகமான பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
