Horoscope: ஒரே மாதத்தில் 9 கிரகங்களின் ராசி மாற்றம்...எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்..!

Horoscope Today: இந்த மாதத்தில் சூரிய குடும்பத்தின் 9 கிரகங்களும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இதில் சனி, குரு, ராகு, கேது, செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகியவை அடங்கும்.

Lucky zodiac signs for this month due to 9 Planets travel

இந்த மாதத்தில் சூரிய குடும்பத்தின் 9 கிரகங்களும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இதில் சனி, குரு, ராகு, கேது, செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகியவை அடங்கும்.

அதன்படி, கிரகங்களின் அதிபதியாக கருதப்படும் செவ்வாய்  2022 ஏப்ரல் 07 ஆம் தேதி, சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். புதன் பெயர்ச்சி 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி இடம் நிகழ்கிறது. ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 12, 2022 ல்  ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசியில் நிகழ்கிறது. 

Lucky zodiac signs for this month due to 9 Planets travel

ஏப்ரல் மாதத்தில் 9 கிரகங்களின் ராசி மாற்றம்:

குரு பெயர்ச்சி ஏப்ரல் 13, 2022 நிகழ்கிறது. சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பெயர்ச்சி ஏப்ரல் 29, 2022 நிகழ்கிறது. மகர ராசியில் சனி மற்றும் சுக்ரன் மார்ச் 29 முதலே இணைகிறார்கள். எனவே, ஏப்ரல் மாதம் நடைபெறும் இந்த 9 கிரகங்களின் மாற்றம் எந்தெந்தெந்த ராசிகளுக்கு பலன்களை அள்ளி தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண யோகம் கிடைக்கும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தாயார் வழி உறவுகளின் உதவி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். 

விருச்சகம்:

இன்று முதல் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். அதிஷ்டம் தேடி வரும்.  உங்களது முயற்சிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கௌரவம், மரியாதை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். 

சிம்மம்:

இன்று உங்கள் உடல் நலம் மேம்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். சொந்த தொழில் துவங்கும் உங்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய நட்பு உறவு உண்டாகும். மகிழ்ச்சி கடலில் நீந்தும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எதிலும் வெற்றி அடைவீர்கள். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு:

இன்று முதல் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். ஆன்மிக பயணம் செல்லலாம். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிரிகள் வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்ளுக்கு, இந்த நேரம் சுமாரகதான் இருக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

மேலும் படிக்க ....Shani Horoscope: ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை பெரும் 5 ராசிகள்...இன்றைய ராசி பலன்..!


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios