காதலர் தினம்..! முன்னாடி இருந்த காதல் திருமணத்தில் முடிஞ்சது .. இப்ப காதல் "முன்னாடியே முடிஞ்சுடுது"..!

யாருக்கு தான் காதல் வருவது இல்லை... காதல் இல்லாத ஒரு வாழ்க்கை நான்றாகவா இருக்கும்.... நினைத்து கூட பார்க்க முடிவதில்லை அல்லவா..? இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. நம் முன்னோர்கள் காலத்திற்கு சென்று சில விஷயங்களை அலசி ஆராய்ந்துவிட்டு மீண்டும்  தற்போதைய காதல் பற்றி பேசலாம்.

அன்றைய கால கட்டத்தில் காதல் என்ற வார்த்தை சொன்னாலே...அது மிக பெரிய வார்த்தையாகவே பார்க்கப்பட்டது. காரணம் .. காதல் என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை  இருந்தது.. அதாவது காதல் செய்தாலே அது  திருமணத்தில் முடிந்து விடும் என்ற நம்பிக்கை தான்... மேலும் "அவர்.. அப்பெண்ணை காதலிக்கிறார்" என ஒரு சிலருக்கு தெரிந்தாலே போதும்.... ஊரே பரவிடும். பின்னர் சில சிக்கல் இருந்தாலும் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து இளம் ஜோடிகளை  சேர்த்து வைப்பர் 

ஆனால் இன்று அப்படியா உள்ளது? காதல் என்பது  ஒரு கத்திரிக்காய் போன்று.. சிலருக்கு அது  சீரியஸான விஷயமாக பார்க்கிறார்கள்... பெரும்பாலோனோர் இளம் வயது என்ற ஒற்றை காரணத்தினால், அந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் காதல் கொண்டு மீண்டும் பல காரணங்களை கூறி பிரிந்து விடுவதும் உண்டு ....

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. கண் இருக்கிறதோ இல்லையோ... காதலனுக்கு ஜாதி மதம்  இனம் அனைத்தும் இருக்கு.. இப்போதெல்லாம் "எல்லோருமே காதல் செய்கின்றார்கள்... காதல் திருமணம்" தான் விரும்புகின்றனர் என நம் கண் முன்னே பேசுவதை  கண்டாலும்... எந்த அளவுக்கு ஜாதி மதம், முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பார்த்து தான் காதல் செய்ய கூட தொடங்குகின்றனர்.
 


அதனையும் மீறி வெறி கொண்ட ஒரு தலை காதலால் பெண்களை பல வகைகளில் டார்ச்சர் செய்வதும், ஆசிட் வீசுவதும், கொலை செய்வதும் என விபரீத முடிவுகளும் எடுக்கின்றனர்.

இது தவிர வேறு ஒரு விஷயம் என்னவென்றால், தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதே.. அப்படி என்றால் இங்கு காதலா இருக்கிறது...காமம் அல்லவா உச்சக்கட்டத்தில் எட்டி பார்க்கிறது..

இது போன்று காமத்திற்கு முக்கியத்தும் கொடுத்து, முறை தவறி பழகுவதால் ஏற்படுவது தான் கள்ளக்காதல்..காதலில் இது அடுத்த ரகம் ... விபத்துகளால் ஏற்படும் மரணத்தை விட கள்ளகாதலால் ஏற்படும் கொலை குற்றங்கள் தான் அதிகமாக உள்ளது.

இப்ப.. நாம முதல் பாயிண்டுக்கு போவோம்.. அதாவது 80 மற்றும் 90 கிட்ஸ் பற்றி பேசினால் ஒரு விதமான சந்தோஷம் இருக்கும். காரணம் காதலை உண்மையில் அனுபவித்து மனதார விரும்பி, சூழ்நிலை காரணமாக திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் "காதல் அழிவதில்லை" என்ற கோணத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் கொடுக்காமல் அவரவர் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறார்கள்...

ஆனால் இன்றோ டெக்னாலஜி வளர்ந்து விட்டது.. உலகத்தில் எந்த மூலையில் உள்ள நபருடனும் பேச முடியும,பார்க்க முடியும்.. நட்பு கொள்ள முடியும்.. காதல் கொள்ள முடியும் .. கள்ளக்காதல் செய்ய முடியும்.. பின்னர் குடும்ப வாழ்க்கையை கெடுத்துகொண்டு நம்மை நம்பி வந்த துணைக்கு துரோகம் செய்துவிட்டு உண்மையான குடும்ப வாழ்க்கையும் வாழ முடியாமல்.. கள்ளக்காதல் மோகத்தால் அனைத்தும் இழந்து நடு தெருவில் நிற்பதும் ... நாண்டுக்கிட்டு சாவதும் என பல குற்ற பின்னனியில் முடிகிறது வாழ்க்கை...

எனவே... வரும் பிப்ரவரி 14  ஆம் தேதி... காதலர்கள் சந்திக்கும் போது தெளிவான சிந்தனையுடன் நேர் வழியில் காதலை வெளிப்படுத்தி... திருமணத்தில் முடிய ஏதுவாக நல்ல முடிவை எடுத்து.... நான் ஏமார்ந்து விட்டேன் என யாரிடமும் ஒப்பாரி வைத்து அழும் நிலைக்கு செல்லாமல்... நல்ல  வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். இந்த பதிவில் நாம் தெய்வீக காதலை பற்றி பேச வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.