காதலன் வெளியிட்ட "ஷாக்கிங்" வீடியோ..! சினிமா தியேட்டரில் ஆடிப்போன காதலி...! இனி படத்தில் கூட இப்படி ஒரு காதலை காண முடியாது...!  

ஆறுமாத காலமாக ஒரு அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கி அதன்மூலம் தன் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

லீ லொக்லர் என்பவர் தன்னுடைய தோழியான சுதுதியை காதலித்துள்ளார்.காதலிக்கு ஸ்லீப்பிங் பியூட்டிஅனிமேஷன் வெர்சனல் பிடிக்கும் என்பதால், அதனை வைத்தே அதில் வரும் நாயகன் நாயகிகளாக தங்களை வைத்து அனிமேஷன் செய்துள்ளார். இதனை தியேட்டரில் வெளியிடவும் செய்தார். அப்போது தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து பார்வையாளர்களாக அமரவைத்து பின்னர் அணிமேஷன் பிலிம் பிளே செய்தனர். 

அப்போது தன் காதலியுடன் ஆர்வமாக அனிமேஷன் பிலிம் பார்த்து கடைசியில் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார் லீ. மேலும் சற்றும் எதிர்பாராத காதலி மெய்சிலிர்த்து காதலை ஏற்றுக்கொள்கிறார் 

ஒருவேளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எப்படி ரியாக்ஷன் இருக்க வேண்டுமோ அதையும் அந்த அனிமேஷன் பிலிமில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொண்டால் சந்தோஷமாக இருக்கும் அணிமேஷன் காட்சியும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் இதைப் பார்ப்பவர்கள் படத்தில் வரும் காதல் காட்சிகளை எல்லாம் விஞ்சி நிஜ காதல் சர்ப்ரைஸ் வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.