வீடு, வாகனம் வாங்க... வட்டி விகிதம் மீண்டும் குறைவு..! ரிசர்வ் வங்கி அதிரடி..! 

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை 0.25% குறித்து அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. மும்பையில் இன்று நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ் இதனை அறிவித்துள்ளார். இதன் மூலம் ஐந்தாவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டு  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த நான்கு முறை குறைக்கப்பட்ட வட்டி விகிதம் மட்டும் 1.10 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி குறைப்பு மூலம்  வீடு வாகனங்கள் உள்ளிட்டவைக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து 5 ஆவது முறையாக தற்போது 0.25 சதவீதம்  வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1.35 சதவீதம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் 0.4 சதவீதம் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்த்த நிலையில் 0.25 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது மூலம், 5.40 லிருந்து 5.15 சதவீதமாக உள்ளது. இந்த வட்டி விகிதம் குறைப்பு மூலமாக ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் வீடு வாங்குபவர்களின் விகிதம் அதிகரிக்க கூடும் என்பதால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.