Asianet News TamilAsianet News Tamil

பென்சில் முனையில் 0.5 அங்குல லிங்கம்...! மகா சிவராத்திரியன்று அற்புத காட்சி..!

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் வசித்துவரும் மினியேச்சர் கலைஞர் ஒருவர் இவ்வாறு செய்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

lingam on the pencil tip special foe maha sivarathiri
Author
Chennai, First Published Feb 21, 2020, 6:53 PM IST

பென்சில் முனையில் 0.5 அங்குல லிங்கம்...! மகா சிவராத்திரியன்று அற்புத காட்சி..! 

மகாசிவராத்திரியான இன்று சிவ பக்தர்கள் இரவு முழுக்க கண்விழித்து சிவ நாமத்தை உச்சரிக்க இப்போதே தொடங்கியுள்ளனர். 

மேலும் இன்று காலை முதல் விரதம் இருப்பவர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். மக்களுக்கு தானம் செய்யவும் தயார் செய்து வருகின்றனர். இந்த ஒரு நிலையில் மகாசிவராத்திரி அன்று கலைஞர் ஒருவர் பென்சில் முனையில் 0.5 அங்குல அளவில் சிவலிங்கத்தை உருவாக்கி உள்ளார். 

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் வசித்துவரும் மினியேச்சர் கலைஞர் ஒருவர் இவ்வாறு செய்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் நுணுக்கமாக அந்த மினியேச்சர் லிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பென்சில் முனையில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒரு சிறிய மூடியுடன் சேர்த்து பார்க்கும் போது மிக அழகிய ஒரு உருவத்தை கொடுக்கிறது.

lingam on the pencil tip special foe maha sivarathiri

மகா சிவராத்திரியான இன்று இப்படி ஓர் புதிய முயற்சியில் கலைஞர் ஒருவர் சிவலிங்கத்தைச் செதுக்கி உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்து பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

lingam on the pencil tip special foe maha sivarathiri

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை சேர்ந்த மினியேச்சர் கலைஞர் ஒருவர், பென்சில் முனையில், புள்ளி ஐந்து அங்குல அளவில் சிவலிங்கத்தை செதுக்கி அசத்தியுள்ளார். மிகவும் நுணுக்கமான, அந்த மினியேச்சர் லிங்கம், சிறிய பாட்டிலில் வைத்தவுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios