அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற தொலைக்காட்சியில் இந்திய வம்சாவளி பெண்ணான லில்லி சிங் என்பவர் வரும் செப்டம்பர் மாதம் முதல் நடக்க உள்ள உரையாடல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பஞ்சாபை சேர்ந்த பெண்ணான லில்லி சிங் டொரண்டோவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு யூடியூப் சேனலை துவக்கி இதுவரை 14 மில்லியன் மக்களை பின் தொடர வைத்துள்ளார். மேலும் youtube நட்சத்திரமாகவே வலம்வந்த லில்லி சிங் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். இது தவிர்த்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் திறமை மிக்க லில்லி சிங், காமெடியாகவும், கருத்தாகவும், திறமையாக கையாள கூடிய ஒருநபர். அதிலும் குறிப்பாக இவருடைய  நுனிநாக்கு ஆங்கிலம் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு புலமை பெற்றவர். இவருடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் தான், அமெரிக்காவின் மிகவும் பிரபலமான என்பிஎஸ் தொலைக்காட்சியின் இவருக்கு கொடுத்த அழைப்பு.