Asianet News TamilAsianet News Tamil

உலகின் கவனத்தை ஈர்த்த 8 வயது மணிப்பூர் சிறுமி..! கிண்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளியில் ஆற்றிய உரையை நீங்களே கேளுங்கள்..!

குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும், அழிந்து வரும் இயற்கை வளத்தை பேணிக்காப்பது குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பது குறித்தும் பல்வேறு நடவடிக்கை குறித்து தன்னுடைய குரலை எழுப்பி உலகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்டவர்.

Licypriya Kangujam is a child environmental activist from India and her speech at hindustan international school
Author
Chennai, First Published Jan 11, 2020, 5:18 PM IST

உலகின் கவனத்தை ஈர்த்த 8 வயது மணிப்பூர் சிறுமி..! கிண்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளியில் ஆற்றிய உரையை நீங்களே கேளுங்கள்..!   

ஏழு வயதே ஆன சுற்றுச்சூழல் ஆர்வலரும் குழந்தை நட்சத்திரமான லிசி பிரியா கங்குஜம்  சென்னை கிண்டியில் உள்ள இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் உரை நிகழ்த்தினார். 

இன்றைய குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும், அழிந்து வரும் இயற்கை வளத்தை பேணிக்காப்பது குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பது குறித்தும் பல்வேறு நடவடிக்கை குறித்து தன்னுடைய குரலை எழுப்பி உலகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்டவர்.

அந்த வகையில் இவருடைய ஆர்வத்தையும் அறிவாற்றலையும் ஊக்குவிக்கும் பொருட்டு 2019 ஆம் ஆண்டு டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது தவிர World Children Peace Prize (2019), India Peace Prize (2019), Rising Star of Earth Day Network (2019) உள்ளிட்ட  பல்வேறு   விருதுகளை இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் முன்பு நின்று சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து சட்டம்  கொண்டு வர வேண்டும் என பிரதமரின் கவனத்தை  ஈர்க்கும் வகையில் பதாகைகளை ஏந்தி நின்று அனைவரின் கவனத்தை ஈர்த்தவர இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"
 
மேலும் இவ்ருடைய ஆர்வத்தையும்  திறமையையும் பார்த்து சர்வதேச அளவில் பள்ளிகளில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு தற்போது வரை 18 நாடுகளுக்கு சென்று   மாணவர்கள் மத்தியில் எழுச்சி உரை ஆற்றி சுற்றுசூழகில் குறித்து மிக முக்கிய கருத்தை முன் வைத்து  வருகிறார். இதற்காக "SUKIFU" (Survival Kit for the Future) என்ற அமைப்பை ஏற்படுத்தி மாசற்ற காற்றை சுவாசிக்கு வகையில் உலகம் முழுதும் மாசு காற்று இல்லாதவாறு உருவாக்க வேண்டும் என்பதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார் லிசி பிரியா கங்குஜம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios