காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர் ஒருவரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூபாய் 3,82,199 பணத்தை பணத்தை மாண்டியா எல்ஐசி நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக காஷ்மீரில் நடந்த பயங்கர தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியானார்கள் உயிரிழந்தவர்களில் ஒருவர்தான் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குடிகிரி கிராமத்தில் வசித்து வந்த இவர் கடந்த கடந்த 2011ஆம் ஆண்டு சிஆர்பிஎப் பணியில் சேர்ந்தார்.

இவருடைய பெற்றோர்கள் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் தன்னுடைய மகனுக்கு எப்படியாவது இந்த ஆண்டு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசை ஆசையாய் கடந்த10 மாதங்களுக்கு முன்பு கலாவதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். குருவிற்கு 2 தம்பிகள் உள்ளனர். கடந்த மாதம் விடுமுறையில் தன் வீட்டிற்கு வந்து சென்ற குரு இந்த மாதம் பத்தாம் தேதி தான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட அன்று மதியம் கடைசியாக அவருடைய தாயாருடன் பேசியுள்ளார் குரு. பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் குருவின் உடலை அடக்கம் செய்யக்கூட அவர்களுக்கு சொந்தமாக சிறு இடம் இல்லை என்பதே...

இதனை அறிந்த அரசு, அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் சிறு பகுதியை குருவிற்காக ஒதுக்கி உள்ளது. வீரமரணமடைந்த குருவின் மனைவி கலாவதிக்கு அவருடைய தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாண்டியாவில் உள்ள எல்ஐசி நிறுவனம் குருவின் குடும்பத்திற்கு, எந்த ஒரு ஆவணமும் இன்றி, 4 லட்சம் பணத்தையும் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.