டெல்லியில் கொரோனா எதிரொலி ..! அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை..! 

கொரோனா பாதிப்பு எதிரொலியால் டெல்லியில் அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது

உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவையும் தாக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் நேற்று மாலை வரை கொரோனா வைரஸால் 28 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு நிலையில் தற்போது வரை 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற ஒரு நிலையில் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளார் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் மணீஷ் சிசோடியா. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக டெல்லியில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் மார்ச் 31ம் தேதி வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொரோனா பாதிப்பு எதிரொலியால் டெல்லியில் பயோமெட்ரிக் முறையில் பதிவு தடைசெய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்து உள்ளது டெல்லி அரசு என்பது குறிப்பிடத்தக்கது.