போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராத ரசீது சீட்டை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மற்ற பெருநகரங்களில் கட்டாய ஹெல்மெட் முறை அமலில் உள்ள நிலையில் சென்னையில் முழுமையாக கட்டாய ஹெல்மெட் முறை கொண்டுவரப்படவில்லை என்பதே உண்மையாக உள்ளது. இன்றளவும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்போரை எளிதாக பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் காரணம் வெறும் 100 ரூபாய் அபராதம் கட்டினால் போக்குவரத்து காவல்துறையினர் விட்டு விடுவார்கள் என்பதே... 

இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த பின்னர்... அபராத தொகையை உயர்த்துவது குறித்து தற்போது மசோதா தயாராக உள்ளது. மிக விரைவில் அந்த திட்டம் அமலுக்கு வரும். இந்த தருணத்தில் போக்குவரத்து விதி மீறல்களை மீறுவோர் மற்றும் ஹெல்மெட் அணியாமல் செல்வோர், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும், விதிகளை மீறி செல்பவர்களின் வீட்டிற்கே அபராத ரசீது சீட்டை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கை ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது உயர்நீதிமன்றம்.