பொது இடங்களில் அமர்ந்து தாய்ப்பால் ஊட்டுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல பெண் பிரபலங்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலையாள இதழ் தனது அட்டைப்படத்தில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்ற ஒரு படத்தை பிரசுரித்தது.

அப்போது  இது சமூக ஊடகத்தில் விவாதத்தை எழுப்பியது. மலையாள மாடல் ஜிலு ஜோசப், ஒரு குழந்தைக்கு பாலூட்டுவது போல போஸ் கொடுத்து இருந்தார். ஒரு தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம், இந்திய பத்திரிகையின் அட்டையில் அப்போது தான் இடம் பெற்றது.

பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வை உண்டாக்குவதற்காகதான் அந்த  படத்தை பிரசுரித்தோம் என அந்த பத்திரிக்கை விளக்கம் அளித்தது. இந்நிலையில் கைப்பந்து வீராங்கணை ஒருவர் பொது இடத்தில் அமர்ந்து தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மிசோரத்தில் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்க நெங்குலுன் ஹேங்கால் என்ற வீராங்கனை  தனது 7 மாத கைக்குழந்தையுடன் வந்திருந்தார். 

போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. சிறிது இடைவேளையின் போது பசியால் துடித்த தனது 7 மாத கைக்குழந்தைக்கு அந்தப் பெண் தாய்ப்பால் ஊட்டினார்.

இதையடுத்த அவர் தாய்ப்பால் ஊட்டும் அதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில் குழந்தை பசியால் துடித்ததும் பொது இடமாக இருந்தாலும் தாய்மை உணர்வை வெளிப்படுத்தியதை பலரும் பாராட்டி வருகினறனர்