ஒரே ஒரு "டேட்டிங்" ..."வாழ்க்கையை' காலி  செய்யும் பெண்கள்..! ஹீரோ போன்று வந்து நின்றால் வருகிறதா மயக்கம்..? 

டேட்டிங் பற்றி மிகவும் வெறுப்பூட்டும் விஷயம் என்னவென்றால், ஒரு பையனை நீங்கள் சந்திக்கும் போது, ​​அவருக்குத் தெரிந்த அனைத்து அழகான பெயர்களையும் உங்களிடம் சொல்வார்கள். ஆனால் அவரது உதடுகளிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் உண்மையா என்று சந்தேகிக்க வைக்கிறது அல்லவா..? பார்க்க அழகா...சினிமாவில் வருவது போல பந்தாவா ஒரு  ஆண் உங்கள் முன் வந்து நின்றால் உடனே நம்பி விட முடியுமா...? 

எதிரில் இருப்பவர் தவறான நோக்கில் உங்களை பார்க்கலாம் அல்லது உங்களிடம் இருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கலாம். 

ஒருவேளை அவர் உங்களை விரும்புகிறேன் என சொல்லும்போது, ​​ஏதோ பெண்களுக்குள் ஒருவிதமான படபடப்பு காணப்படும். மனதிற்குள் ஏதோ ஒன்ற பறப்பது போல உணர்வீர்கள். இவை  அனைத்தும் ஒரே நாளில் மிக விரைவாக நடக்கிறது 

எதிரில் உள்ள நபரை பார்க்கும்போது மிகவும் பக்குவமாக வாழ்க்கையில் அவருக்கு என்ன தேவை? எது தேவையில்லை?அனைத்தையும் உணர்ந்து நமக்காகவே நம் முன் அமர்ந்து, நமக்காகவே பேசுவது போன்ற தோற்றம் உருவாகலாம். அதாவது நீங்கள் இதுவரை பார்த்த எந்த ஒரு ஆண்மகனும் இப்படி இல்லை என்ற ஓர் எண்ணம் கூட உங்கள் மனதில் தோன்றலாம் 

ஆனால் இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் உங்களுக்கு அந்த நபர் மீது ஆர்வம் இருக்கலாம். ஆனால் அவருக்கு உங்கள் மீது ஒரு சீரியஸ் ரிலேஷன்ஷிப் இருக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இது போன்ற ஒரு தருணத்தில்  பெண்கள் அவர்களுக்குள்ளே ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும். அதாவது தன் மீது காதல் இல்லாத ஒரு நபர் மீது தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதும் எதிர்பார்ப்பதும் சரிதானா என்ற கேள்வியை வையுங்கள்.

நம்மிடம் பேசுபவர்கள் சொன்னது அனைத்தையும் செய்து காட்டுவார்களா ? என்றால் அதற்கு பதில் காலம் தான் சொல்லும். காரணம் பேசுவது ஒன்றாக இருக்கும். செய்வது மற்றொன்றாக இருக்கும் அல்லது அவர்கள் சொல்லை நம்பி நீங்கள் காத்திருந்தால் சில விஷயங்களில் அவர்கள் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவார்கள். இப்படிப்பட்ட ஒரு நபர் நம் வாழ்க்கையில் தேவையா என பெண்கள் சிந்திக்க வேண்டும்.

அதே நபர் நேரடியாகவே, உங்கள் மீது ஈர்ப்பு  இல்லை என்றும் காதல் போன்ற ஐடியா இல்லை என்றும்  சொல்லி விட்டால் மனதளவில்  நீங்கள் அவரைதூக்கி  ஏறிய தயாராக இருங்கள். ஆனால் இதனை நினைத்து வருத்தப்டுவதும், வேதனை படுவதையும், நேரத்தை வீணடிப்பதும் 
தேவை இல்லாத ஒன்று 

இப்படி ஒரு பைனிடம் இருந்து ஒரு பெண் விலகிவது தான் சரி. ஆனால் இது போன்ற தருணத்தில் ஒரு பெண் நினைப்பது என்ன தெரியுமா..? அடடே.. இப்படி ஒரு பையனை இழந்துட்டமே... என்னை காதலிக்கவில்லையே..? இனி மேல் எங்கு தேடினாலும் இது போன்ற பையனை பார்க்க முடியாதே... என்ற இது போன்ற முட்டாள் தனமான எண்ணங்களில் இருக்க கூடாது என்பதை  பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இது போன்ற தருணத்தில் அவரை விட்டு அமைதியாக விலகி செல்லுங்கள்...அந்த நபரை பெரும் பொருட்டாக  நினைக்க வேண்டாம். தொடர்ந்து அந்த நபரை நினைத்து வருத்தப்பட்டுகொண்டு  இருப்பதையும், தன்னை மதிக்காத தன் மீது அன்பு கூட இல்லாத ஒரு நபருக்காக உங்கள் வாழ்க்கையை  கொடுக்க.. நீங்கள் நினைத்தால் அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. 

அது மட்டும்  அல்ல... உங்களுக்காகவே... உங்களை பார்க்க வேண்டும்..உங்களிடம் பேச வேண்டும்... உங்களுடனே எப்போதும் இருக்க வேண்டும்.. உங்களின் வெற்றி தோல்வி என அனைத்திலும்  பங்கு பெற்று வாழ்க்கை துணையாக இருக்க உங்கள் பின் ஓடோடி வரும் நபரை பல பெண்கள் தவறவிட்டு பின் வாழ்க்கையில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது.  

வாழ்க்கையில் தேவை  இல்லாத நபருக்காக நேரத்தை ஒதுக்கி அவருக்காகவே காத்திருக்க  நினைக்கும் பெண்கள் வாழ்க்கையில் எது உண்மை..? எது பொய்..?  என்பதை புரிந்துக்கொள்ள கொஞ்சம்  ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றே சொல்லலாம்