பெண்களின் உள்ளாடைகளை திருடும் வித்தியாசமான ரக திருடன்...! சென்னை  அடுக்குமாடி வீட்டில் பரபரப்பு..!  

சென்னை ஆதம்பாக்கத்தில்  நியூ காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் அவ்வப்போது பெண்களின் உள்ளாடைகள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு வீட்டில் விடியற்காலை 3 மணி அளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு அங்கிருந்த பெண்களின் ஆடைகளை திருட முயற்சி செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்கும் படுக்கை அறை ஜன்னல் கதவு மெதுவாக திறந்து உள்ளாடைகளை திருட முயற்சி செய்கிறார்.  இவை அனைத்தும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இந்த விசித்திர புகார் குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் உள்ளாடைகளை திருடும் பழக்கம் கொண்ட நபர் யார்? எதற்காக திருடுகிறார்? தெரிந்த நபரா  அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டவரா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.