ladies feel uneasy for gents dressing

அலுவலகத்தில் பெண்கள் பணிபுரியும் இடத்தில் ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மனநல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். அந்த பாதுகாப்புணர்வை ஆண்கள் பெண்களுக்கு தர வேண்டும். எந்த கெட்ட பழக்கமாக இருந்தாலும் அலுவலகத்தில் மற்றவர் முகம் சுளிக்கும் படி இருப்பதாக உணர்ந்தால் தன்னுடைய கெட்ட பழக்க வழக்க வழக்கத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

பொதுவாக ஆண்கள் புகை பிடிப்பது பெண்களுக்கு பிடிக்காது. காரணம் சிகரெட் நாற்றம், பெண்களுக்கு அந்த நாற்றம் பிடிக்காமல் குமட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

அதே போல் திருமணமகாதவராக இருந்தால் உடுத்தும் ஆடை துவைக்க வசதி இல்லாமலோ, அல்லது நேற்று உடுத்திய உடையை துவைக்காமலோ போட்டு வந்தால் வியர்வை நாற்றம் தாங்க முடியாமல் எல்லோரும் ஒதுங்கி ஓட ஆரம்பித்ததுவிடுவார்கள்.

எனவே குளித்து தூய்மையான ஆடையை அணிந்து வர வேண்டும். பெண்கள் முன்பு உட்காரும் போது கொஞ்சம் நாகரிகமாக உட்கார வேண்டும். அநாகரிகமாக உட்கார ஆரம்பித்தால் பெண்கள் அலுவலகத்தில் நடக்கவே முகம் சுளிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுமட்டுமல்ல தற்போது பெண்களை தர்ம சங்கடமாக உணர வைக்கும் ஒரே விஷயம் ஆண்கள் தங்கள் உள்ளாடை தெரியும்படி உட்காருவது, நிற்பது, நடப்பது. எனவே பெண்களின் மைண்டு வாய்ஸாக கேட்பது உன் ஜாக்கி ஜட்டியை பார்க்கவா அலுவலகம் வரேன் என்கிறார்கள் பெண்கள். இவ்வாறு உள்ளாடை தெரியும்படி ஆண்களை பார்த்தார்கள் முகத்தில் காறித் துப்பத் தோன்றுகிறதாம். எனவே ஆண்களே உஷார் பெண்களை வெறுப்பேற்றாதீர்கள்.