Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் அவலநிலை..! தண்ணீருக்காக ... இப்போதே இப்படி..!

கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

lack of drinking water in chennai
Author
Chennai, First Published Apr 19, 2019, 5:25 PM IST

கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரணம் அந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதே.

பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆண்டும் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

lack of drinking water in chennai

கத்திரி வெயில் தொடங்கும் முன்பே கோடை வெயில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

lack of drinking water in chennai

இப்போதே தண்ணீருக்காக குடங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடிக்க செல்கின்றனர் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தண்ணீருக்கு கடும் பஞ்சம் ஏற்படும்  என்பது உறுதி

Follow Us:
Download App:
  • android
  • ios