ரொமான்டிக் வாரத்தின் 7- வது நாளான இன்று பிப்ரவரி 13-ம் தேதி ''முத்த தினம்". முத்தம் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரிந்து கொள்வோம்.

ரொமான்டிக் வாரத்தின் 7- வது நாளான இன்று பிப்ரவரி 13-ம் தேதி ''முத்த தினம்". முத்தம் பற்றிய சுவாரஸ்ய தகவல் தெரிந்து கொள்வோம். இந்த தினத்தில், இளையராஜாவின் இசையில் உருவான, முத்தமிழே.... முத்தமிழே... முத்த சத்தம் ஒன்னு கேட்பதென்ன என்ற பாடல் வரிகள் இணையத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கின்றன.

முத்தத்தை கொடுத்தாலும் சரி அன்பானவர்களிடம் இருந்து முத்தத்தை வாங்கினாலும் சரி உடலும் மனமும் உற்சாகம் அடையும். காரணம் முத்தத்தினால் ரத்த அணுக்களின் ஒவ்வொரு செல்லும் உற்சாகமடைகிறது. அன்பான முத்தம் தொடங்கி மருத்துவ முத்தம் வரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய முத்தங்கள் உள்ளன.

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். ரோஸ் தினம், ப்ரோப்போஸ் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், பிராமிஸ் தினம், முத்த தினம், கட்டிப்பிடித்தல் தினம், காதலர் தினம், என காதலைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

ரொமான்டிக் வாரத்தின் 7- வது நாளான இன்று பிப்ரவரி 13-ம் தேதி ''முத்த தினம்". முத்தத்தில் இத்தனை வெரைட்டியா...

முத்தத்தில் மூன்று வகைகள் இருக்கின்றன. அதில் முதல் வகை என்பது சாதாணமாகக் கன்னத்தில் முத்தமிடுவது. இரண்டாவது உதட்டில் ஒரு முறை மட்டும் ஒற்றி எடுப்பது. மூன்றாவது வகை என்பதுதான் ஆழமாக நாக்குகளை நீட்டித்து கொடுக்கும் பிரெஞ்சு முத்தம்.

இப்படி முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் பரிமாறிக்கொள்ளும்போது கிட்டத்தட்ட 80 மில்லியன் நுண்ணுயிரிகளையும் பரிமாறிக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை எப்பேர்பட்ட ஞாபக மறதி கொண்டோரும் அந்த முதல் முத்தத்தை மறக்க மாட்டார்கள்.

முத்தம் குறித்த ஆய்வுகளில், மனிதர்களுக்கு முத்தம் ஏன் முக்கியம் என்பது தொடர்பான தத்துவங்களில் மனிதர்கள் குழந்தைகளாக இருந்த போது இருந்து உதடு மூலம் மேற்கொள்ளும் தொடுதல்கள் நெருக்கமானதாகக் கருதப்படுகின்றன. குழந்தைகளுக்குப் பாலூட்டுவதில் இந்த உணர்வு அனைவரிடமும் ஒருசேர இருக்கிறது. மேலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூதாதையர்களில் தாய்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவை மென்று, வாய் மூலம் வழங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கம் சிம்பான்சி வகைக் குரங்குகளிடம் காணப்படுவதால் இவ்வாறு கருதப்படுகிறது. 

ஆடையே முத்தம் என்ற அம்சம் தோன்றியதற்கான காரணம் எனவும் ஒரு தத்துவம் நிலவுகிறது. மனிதர்களிடையே இதழ் முத்தம் தோன்றியதற்கான அடிப்படை காரணமே உடைகள் தான் என்று கருதுகிறேன். ஏனெனில் உடைகள் இல்லாமல் இருந்திருந்தால் முத்தத்தைத் தவிர மனிதர்கள் தம் பிரியத்தை வேறு விதங்களில் வெளிப்படுத்தியிருக்கலாம் எனக்கின்றனர் ஆய்வாளர்கள்.



மேலும், முத்தமிட்டுக்கொள்வதால் மனஅழுத்தம் குறைகிறது. சராசரி வாழ்நாளைவிடக் கூடுதலாக ஐந்து வருடங்கள் வாழலாம். ஆண் , பெண் உறவு முறையில் திருப்த்தி மகிழ்ச்சி அதிகரிக்கும். முத்தமிடும்போது இதயம் நிமிடத்திற்கு 100 முறை வேகமாகத் துடிக்கிறது. இதனால் கொழுப்புகள் குறைகிறது. இது உடற்பயிற்சிக்கு சமமான நன்மை என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.