சாதாரண காக்கா போட்டோ போட்டு கடுப்பேற்றும் கிரண்பேடி..! 

புதுவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் கிரண்பேடி சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து தான் இருசக்கர வாகனத்தை இயக்க வேண்டும் என வற்புறுத்தினார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிரண்பேடி அதிகாரத்தை கையில் எடுத்து அரசின் உரிமைகளை பறிப்பதாக முதல்வர் நாராயணசுவாமி கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து விமர்சனம் செய்துள்ள கிரண்பேடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு காகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு செய்தியாளர் என்னிடம், தர்ணா ஒரு வகையான யோகாவா என கேள்வி எழுப்பினார். அதற்கு நான் ஆம் என்று சொன்னேன். ஆனால் எப்படி அமர்ந்து உள்ளோம்...எப்படி ஒலியை எழுப்புவது என்பதை பொறுத்து என்ன  ஆசனம் என சொல்லலாம் என பதிவிட்டு உள்ளார்.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு முதல்வரை பேச்சுவார்த்தை நடத்த வர கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ள இந்த தருணத்தில், அவரது ட்விட்டர் பக்கத்தில் இது போன்ற பதிவையும் பதிவிட்டு உள்ளதால் கடந்த சில நாட்களாக முதல்வர் நாராயணசுவாமி நடத்திவரும் தர்ணா போராட்டத்தை கிண்டல் செய்வது போல உள்ளது என விமர்சகர்கள் விமர்சனத்தை எழுதி வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம்  இருக்க, இன்று காலை இலந்தை பழம் பாட்டு ஞாபகம் இருக்க என? ஆளுநர் கிரண்பேடியை கிண்டல் செய்வது போல முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திலேயே ஒரு பாடலை பாடினார். இந்த நிலையில் தான் ஆளுநர் கிரண்பேடி தனது த்விட்டேர் பக்கத்தில் காக்கா பூனையெல்லாம் பதிவிட்டு உள்ளார்.