நம் குழந்தைகள் சரிவர சாப்பிடவில்லை என்ற கவலை பெற்றோர்களுக்கு பெரும் கவலையாக மாறி விடும் அல்லவா? இதற்கு என்னதான் தீர்வு எப்படி குழந்தைகளை சாப்பிட வைப்பது என பலரும் தலையில் கை வைத்து புலம்புவார்கள்.
நம் குழந்தைகள் சரிவர சாப்பிடவில்லை என்ற கவலை பெற்றோர்களுக்கு பெரும் கவலையாக மாறி விடும் அல்லவா? இதற்கு என்னதான் தீர்வு எப்படி குழந்தைகளை சாப்பிட வைப்பது என பலரும் தலையில் கை வைத்து புலம்புவார்கள்.
இதனை சரி செய்ய ஒரு சில முக்கிய டிப்ஸ் இப்ப நாம பார்க்கலாம்.
முதலாவதாக நாம் உண்ணும் உணவையே நம் குழந்தைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து சற்று மாறுபட்டு இருங்கள்
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு ஆரோக்கியமானதாகவும் குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் தயார் படுத்தப்பட்டு உள்ளதா என்பதையும் முதலில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முட்டையை வேக வைத்து கொடுக்கலாம். கலர்ஃபுல்லாக இருக்கக்கூடிய காய்கறிகளை வைத்து வெஜிடபிள் ரைஸ் செய்து கொடுக்கலாம்.

இவை அனைத்தையும்விட மிகமுக்கியமானது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணியிலிருந்து 10 மணி நேர தூக்கமாவது குழந்தைகளுக்கு தேவை. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஹோம் ஒர்க் செய்து முடிப்பது மற்றும் விளையாடுவது என குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிஸியாக வைத்து கொள்வது நல்லது.
அதே போன்று வளரும் குழந்தைகளுக்கு டீ காபி குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக காலையில் ஒரு கப் பாலும் இரவு நேரத்தில் உறங்கும் முன் ஒரு கப் பாலும் கொடுத்தால் நல்லது.
எண்ணெய் சேர்த்துக்கொண்ட உணவு வகைகளை அதிகமாக கொடுக்கக் கூடாது அதேபோன்று மாமிச உணவுகளையும் அதிகமாக கொடுக்க வேண்டாம் முடிந்தால் மீன் கொடுக்கலாம்.
அதிக சத்து உள்ளது என பாதாம் அப்படியே கொடுக்கக்கூடாது. அதனை தண்ணீரில் ஊறவைத்து அதன் தோலை தனியாக எடுத்து விட்டு கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பிடிக்கும் பழ வகைகளை அடிக்கடி கொடுப்பது நல்லது. உடலில் எப்போதும் நீர் சத்து அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போன்று நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க அவ்வப்போது கீரை வகைகளையும் சேர்த்து கொடுக்கலாம்.
இது போன்ற சின்ன சின்ன டிப்ஸ் முயற்சி செய்து வந்தாலே, நம் குழந்தைகள் ஆசை ஆசையாய் உணவை சாப்பிடுவார்கள்
