நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஓடி ஆடி விளையாடி கொண்டிருந்த ஒடிசா தம்பதியினரின் 2 வயது குழந்தையை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திருப்போரூரில் இன்று மீட்கப்பட்டு உள்ளது. நேற்று குழந்தையை கடத்தி செல்லும் அந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.இந்த நிலையில், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததை பார்த்து, கடத்தப்பட்ட குழந்தையை பொதுமக்களில் ஒருவர் கண்டுபிடித்து ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், ரயில்வே போலீசார் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக  தனிப்படை அமைத்து  குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்டு செங்கல்பட்டில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. காப்பகத்தில் உள்ள குழந்தையை காண ஒடிசா பெற்றோர் விரைந்து செங்கல்பட்டுக்கு விரைந்து உள்ளனர்.