பெற்றோர்களே உஷார்..! மின் கம்பத்தில் சிக்கிக்கொண்ட சிறுமியின் தலை..! ரயில் நிலையத்தில் பரபரப்பு....

குழந்தைகள் என்றால் துரு துரு என சுறுசுறுப்பாக விளையாடி கொண்டே தான் இருப்பார்கள். இருந்தாலும் பெற்றோர்களுக்கு தானே குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என தெரிய வேண்டும்? எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் ? குழந்தைகள் விளையாடும் இடம் சரியான இடமா..? பாதுகாப்பானதாக உள்ளதா என்பது நாம் தெரிந்துகொண்டு தானே நம் பிள்ளைகளை விளையாட வைக்க முடியும்.

ஆனால், இன்று திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த மின் கம்பம் இடையில் எதிர்பாராத விதமாக தலையை விட்டு மாட்டிக்கொண்டார். பின்னர் அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் எவ்வளவு போராடியும் குழந்தையின் தலையை வெளியில் எடுக்க முடியாமல் தவித்தனர்.

உடனடியாக ரயில்வே காவல் துறைக்கு இது குறித்து தெரிவித்து, அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், வெல்டிங் மிஷின் மூலம் மின்கம்பியை அகற்றி, சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. மேலும், இது போன்ற சம்பவம் இனி நிகழ கூடாது என்பதற்கு பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.