Keto diet plan: கீட்டொஜெனிக் என்று சொல்லக்கூடிய கீட்டோ டயட், உடல் எடையை கட்டுக்குள் வைக்க, உடல் எடையை குறைக்க பெரும்பாலானோர், அதிகம் பின்பற்றுகிற ஒரு டயட் முறைதான்.
கீட்டொஜெனிக் என்று சொல்லக்கூடிய கீட்டோ டயட், உடல் எடையை கட்டுக்குள் வைக்க, உடல் எடையை குறைக்க பெரும்பாலானோர், அதிகம் பின்பற்றுகிற ஒரு டயட் முறைதான். பிற டயட்களோடு ஒப்பிடுகையில், மிகச்சரியாக பின்பற்றப்படும் போது கீட்டோ டயட் உடல் எடையை பராமரிக்க மிகச் சிறப்பான பணியைச் செய்கிறது.

உணவு முறைகள்:
உடல் எடையைக் குறைக்க கீட்டோ டயட், மேற்கொள்பவர்கள் குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கொழுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளைத் தடுக்கவும் உதவுகிறது. கீட்டோ ஷேக்ஸ், சீஸ், ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் உட்கொள்ளப்படுகின்றன. பழங்கள் கிடையாது. புரத சத்திற்காக, கோழி, மட்டன், மீன், தேங்காய் எண்ணெய் ஸ்மூத்தி ஆகியவவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

உடல் எடைக் குறைப்பில் இரண்டு வகையான நேர நிலைகள் இருக்கின்றன. குறைந்த நாள்களில் எடை குறைப்பது முதல் நிலை. அதன் மீது கவனம் செலுத்துவது கடினம். நீங்கள் டயட்டில் ஈடுபட்டால், முதல் மூன்று வாரங்களில் சற்றே உடல் எடையைக் குறைக்கலாம். ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், இதே எடையை எப்படி ஆயுள் முழுவதும் நீட்டிப்பது என்பது தான்.
பிற டயட்களைப் போலவே கீட்டோ டயட்டிலும் குறைந்த காலத்தில் எடை குறைப்பை மேற்கொள்ள முடியும். ஆனால் இதனை சிறப்பானதாக மாற்றுவது என்னவென்றால், இது நிலையான எடை குறைப்பை வழங்குகிறது.

மேலும், யாரெல்லாம் இந்த கீட்டோ டயட்டை பின்பற்றக்கூடாது என்பதை விளக்குகின்றனர் வல்லுநர்கள்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
வயிறு எரிச்சல், வலி போன்ற வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் கீட்டோ டயட் முறையை பின்பற்றினால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

கர்ப்பிணிகள்:
கீட்டோ டயட்டானது கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்தை இழக்கச் செய்கிறது. எனவே, கர்ப்பிணிகள் கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க, சமச்சீரான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்.
சிறுநீரக பிரச்சனை:

கீட்டோ டயட் முறையில், அதிக கொழுப்பு உணவைக்கொண்டு உடலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு எடுத்துக்கொள்ளும் டயட் முறையை நீண்ட நாட்கள் பின்பற்றுவதும் சிறுநீரகத்தில் கல் உருவாதல் போன்ற வேறுவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, உடல் எடையை குறைக்க கீட்டோ டயட், பின்பற்ற நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பின்பற்றுவது அவசியம்.
