Today astrology: புதன் அஸ்தமனத்தால் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய 7 ராசிகள்..! இன்றைய ராசி பலன்..!
Today astrology: ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகம் தனது ராசியை மாற்றும் போது, அது நேரடியாக மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது சிலருக்கு நன்மை தரும், சிலருக்கு விளைவை ஏற்படுத்தும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகம் தனது ராசியை மாற்றும் போது, அது நேரடியாக மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது சிலருக்கு நன்மை தரும், சிலருக்கு விளைவை ஏற்படுத்தும்.
கிரகம் மாறும்போது அல்லது அஸ்தமனம் ஆகும் போது அது நேரடியாக மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஜோதிடத்தின் படி, புதன் கிரகம் நுண்ணறிவு, வணிகம், தகவல் தொடர்பு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் பகுத்தறிவு என அனைத்து அம்சங்களுக்கும் ஆதாரமாக இருக்கும்.
புதன் கிரகங்களின் அதிபதியாக கருதப்படுகிறது. இந்த கிரகம் மார்ச் 18 அன்று அஸ்தமித்தது. எனவே, புதன் கிரகத்தின் ராசி மாற்றத்தால், சில ராசிகளுக்கு சாதகமாக இருந்தாலும், சில ராசிகள் குறிப்பிடத்தக்க கஷ்டங்களை சந்திக்கலாம். எனவே, எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்:
புதன் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அஸ்தமித்துள்ளார். இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும். வருமான ஆதாரங்களில் குறைவு ஏற்படலாம். தற்போது, நேரம் சாதகமாக இல்லாததால் வியாபாரத்தில் கூட்டாண்மையை தவிர்க்க வேண்டும்.
மிதுனம்:
உங்கள் ராசியிலிருந்து புதன் ஒன்பதாம் வீட்டில் அஸ்தமித்துள்ளார். பொறுமை குறையும், தொழிலிலும் வேலையிலும் சிரமங்கள் ஏற்படலாம். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலும், ஆவணங்கள் தொடர்பான சில சிக்கல்கள் இருக்கலாம். பணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். திருமண வாழ்க்கையிலும் டென்ஷன் வரலாம்.
கடகம்:
தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும். கோபத்தால் சாதிக்கப்போவது ஏதுமில்லை என்பதை அறிந்துக் கொண்டால் நிம்மதி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்பட்டாலும், உத்யோகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம்..மனம் சஞ்சலமாக இருக்கும். வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்:
புதனின் அஸ்தமனம் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தன்னம்பிக்கை குறையலாம் என்பதால் தெய்வ வழிபாடை தொடரவும். மனம் கலங்கும் நிலை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
மிதுனம்:
வேலை மற்றும் தொழிலில் பாதிப்பு ஏற்படலாம். இதனுடன் பணியிடத்தில் உங்களுக்கு அதிக வேலை அழுத்தம் இருக்கும் மற்றும் உங்கள் மேலதிகாரிகளுடனான உறவுகள் மோசமடையக்கூடும். இதன் காரணமாக, பணியிடத்தில் சரியான மரியாதை பெற முடியாமல் போகலாம்.
சிம்மம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றாலும், எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காதல் உறவில் ஏமாற்றம் ஏற்படலாம். புதனின் அன்புக்கும் காதலுக்கும் அதிபதி என்பதால், ஏப்ரல் 29 வரை பொறுமையாக இருக்கவும். உத்தியோகத்தில் கூடுதல் சுமை ஏற்படலாம். வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம்.
மகரம்:
இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் குறைந்த ஆதரவைப் பெறுவீர்கள். பணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். திருமண வாழ்க்கையிலும் டென்ஷன் வரலாம். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வணிக பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்றால், அது சிறப்பாக இருக்கும். ஏனெனில் பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளது.