Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுக்கு இரு புதிய பெயர்கள்... WHO அறிவிப்பு..!

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுக்கு இந்தியாவின் பெயரை முதலில் வைத்து அழைக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு இரு புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

Kappa and Delta.. World Health Organization gives names to Covid-19
Author
Delhi, First Published Jun 1, 2021, 7:23 PM IST

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுக்கு இந்தியாவின் பெயரை முதலில் வைத்து அழைக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு இரு புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் புதுசு புதுசாக கிளம்பி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் பி.1.617 என்ற வகையை சேர்ந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. 

Kappa and Delta.. World Health Organization gives names to Covid-19

இதற்கிடையே, வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக்கூடாது  என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

Kappa and Delta.. World Health Organization gives names to Covid-19

அதன்படி கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட  பி.1.617.1 வகை வைரஸுக்கு 'கப்பா' என்றும் பி.1.617.2 வகை வைரஸுக்கு 'டெல்டா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு வைரஸ்களும் முதன்முதலில் இந்தியாவில் தோன்றியவை எனத் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்பா எனவும், தெனட ஆப்பிரிக்காவில் 2020ம் ஆண்டு மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios