மொழி விஷயத்தில் நாம் தமிழர்களை பின்பற்ற வேண்டுமென கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா, "கன்னட மக்களிடம் பொதுவாகவே மொழிப்பற்று குறைவாக உள்ளது... அந்த விஷயத்தில் தமிழர்கள் தமிழ் மொழி மீது வைத்துள்ள பற்றினை போன்றே கன்னட மக்களும் பின்பற்ற வேண்டும்....

கன்னட மக்கள் கன்னட மொழியில் பேசுவதை விட ஆங்கிலம் இந்தி உட்பட பிற மொழிகளில் பேசுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். மற்ற மொழிகளில் பேசுவதையே விருப்பமாகவும் கொண்டுள்ளனர்.இது இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே இது நமக்குப் பழகி விட்டது..

ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு நேர் மாறாக உள்ளது. தமிழர்கள் தமிழ் மொழிக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்கள். உயிருக்கு நிகராக தமிழ் மொழியை நேசிக்கிறார்கள். தமிழர்களைப் பார்த்து மொழிப்பற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என கன்னட மக்களின் செவுட்டில் அடிப்பது போல் கூறி உள்ளார் சித்தராமையா