காலையில் காபியா? கம்மங்கூழ் குடிச்சு பாருங்க.. ஈஸியான ரெசிபி இதோ!

Kambu Koozh Benefits : தினமும் காலையில் டீ, காபிக்கு பதிலாக கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

kambu koozh recipe and its benefits in tamil mks

கம்பு சிறுதானியங்களில் ஒன்றாகும். இதில் அதிகளவு வைட்டமின்களும், புரதங்களும் உள்ளன. முக்கியமாக இதில் வெள்ளை அரிசியை விட 8 எட்டு மடங்கு இரும்புச்சத்து உள்ளது தெரியுமா. கம்பை கூழ், களி, அடை, தோசை மற்றும் முளைவிட்ட பயிர் என எந்த வகையிலும் சாப்பிடலாம். சொல்லப்போனால் இது தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.

அந்தகாலத்தில் நம்முடைய முன்னோர்கள் தினமும் காலை கம்பு கூழ்தான் குடித்து வந்தார்கள். தற்போது கூட கம்பங்கூழ் தள்ளு வண்டியில் விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக இதை கோடை காலத்தில் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் உடல் சூடைத்தணிப்பதற்கு ஏராளமான பானங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால் அவைகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக கம்பங்கூழ் குடிக்கலாம். ஏனெனில் இது உடல் சூடுடையும் தணிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். அந்தவகையில், தினமும் காலை டீ, காபிக்கு பதிலாக கம்பங் கூழ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:   1 கப் கம்பு மாவு இருக்கா? சத்தான இந்த டிபன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

கம்பில் இருக்கும் சத்துக்கள்:

கம்பில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் இரும்பு, நார்ச்சத்து, பாஸ்பரஸ் புரதம் சோடியம் மற்றும் வைட்டமின்கள் பல போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

இதையும் படிங்க:  ராகி கூழ் 'இப்படி' செய்து குடிங்க.. உடலை இரும்பாக்கும்.. சிம்பிள் ரெசிபி

கம்பங் கூழ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

உடல் சூட்டை குறைக்கும் :

கோடைகாலத்தில் வெயில் தாங்காமல் நிறைய பேர் உடல் சூட்டால் அவதிப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், கோடையில் உடல் சூட்டை தணிக்க இளநீருக்கு அடுத்தபடியாக இருப்பது கம்பங்கூழ் தான். எனவே, தினமும் காலை ஒரு கிளாஸ் கம்பங்கள் கொடுத்து வந்தால் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும்.

இரத்த சோகை பிரச்சினை நீங்கும்:

பொதுவாக உடலில் இரும்புச்சத்து இல்லை என்றால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து ரத்த சோகை பிரச்சனைக்கு வழிவகும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை கம்பங்கூழ் குடித்து வந்தால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் ரத்த சோகை பிரச்சனையும் சரியாகிவிடும்.

உடல் எடையை குறைக்கும் :

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், தினமும் காலை டீ, காபிக்கு பதிலாக கம்பங் கூழ் குடியுங்கள். ஏனெனில் கம்பில் இருக்கும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கும் மற்றும் உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது அதிகம் சாப்பிடுவதை தடுக்கும். 

சர்க்கரை நோய்க்கு நல்லது:

கம்புவில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளதால் இது ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. எனவே ரத்த சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் காலை கம்பங்கூழ் குடித்து வந்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். குறிப்பாக இது டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது.

எலும்புகளை வலிமையாக்கும்:

கம்புவில் கால்சியம் ஏராளமாக உள்ளதால் தினமும் காலை தவறாமல் இதைக் குடித்து வந்தால் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலிமையாக்கும். முக்கியமாக எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதை இது தடுக்கும். அதுமட்டுமின்றி எலும்பு முறிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு கம்பங்கூழ் ரொம்பவே நல்லது.

நல்ல தூக்கம் வரும்:

கம்புவில் இருக்கும் ட்ரிப்டோஃபேன் உடலில் செரடோனின் அளவை அதிகரிக்க செய்து மன அழுத்தத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் இரவு தூங்கு செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் கம்பங்கூழ் குடித்து வந்தால் மன அழுத்தம் குறையும். இதனால் இரவு நல்ல தூக்கம் வரும்.

மாதவிடாய் வலியை நீக்கும்:

கம்புவில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால், பெண்கள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் பிடிப்பைப் போக்க கம்பங்கூழ் குடிக்க வேண்டும். 

கம்புகூழ் யாரெல்லாம் குடிக்க கூடாது:

சைனஸ், சிறுநீரக கல், சரும பிரச்சனை வாதம், பித்தம் உள்ளவர்கள் கம்புகூழ் எடுத்துக் கொள்ளக் கூடாது.

கம்புகூழ் யாரெல்லாம் குடிக்கலாம்:

- உடல் எடை அதிகமாக இருப்பவர்கள்
- தாய்ப்பால் கொடுப்பவர்கள்
- மாதவிடாய் வலி உள்ளவர்கள்
- வயிற்று புண் உள்ளவர்கள்

கம்பங்கூழ் செய்முறை:

தேவையான பொருட்கள்:

கம்பு - கால் கிலோ
மோர் - அரை லிட்டர்
உப்பு - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

இதற்கு முதலில் கம்பை தண்ணீரில் நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வெயிலில் காயவைத்து பிறகு மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அரைத்த கம்பை அதில் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். சுமார் பத்து நிமிடம் கழித்து உப்பு சேர்த்து கிளறி விடுங்கள். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி மோர் மற்றும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து குடிக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios