சில வருடங்களு முன்.. "கமலும்-ஸ்ருதி ஹாசனும்"..! மறக்க முடியுமா..? 

சில வருடங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பெரும் ஜாம்பவானான கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற ஓர் கட்சியைத் துவங்கி சென்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தன் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார்.

மக்கள் நீதி மய்யத்திற்கென தனி தொண்டர்களே தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இது தவிர தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் மற்றும் தன்னுடைய நடிப்பையும் விடாமல் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இவை மூன்றையும் ஒருசேர கவனித்து வரும் கமல்ஹாசன் ஒரு பக்கம் இருக்க... மற்றொரு பக்கம் அவருடைய மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு தற்போது பாலிவுட் ஹாலிவுட் என பிஸியாக வலம் வருகிறார்.

தந்தையும் மகளும் வெவ்வேறு விதங்களில் மிகவும் பிஸியாக தங்களுடைய வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட மிக அழகான புகைப்படம் வைரலாக பரவிவருகிறது. இந்த புகைப்படம் ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள் மட்டுமின்றி கமலின் தொண்டர்கள் வரை அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.