தோசை சுட போறீங்களா? அப்ப மஸ்ரூமில் இப்படி தோசை சுட்டு சாப்டுங்க.. சுவையா இருக்கும்!
Mushroom Masala Dosai Recipe : காளான் மசாலா தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் காலை மற்றும் இரவு உணவு இட்லி அல்லது தோசை ஆகும். அதிலும் பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவது தோசை தான். வெங்காய தோசை, ரவா தோசை, மசாலா தோசை என்ன தோசைகளில் பல வகைகள் உள்ளன. அந்த வகையில் இன்று உங்கள் வீட்டில் காலை உணவாக தோசை செய்ய போறீங்களா? சற்று வித்தியாசமான சுவையில் சாப்பிட விரும்பினால் மஸ்ரூம் மசாலா தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசை சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாகவும், செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்காது.
இந்த தோசையை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுங்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் காளான் மசாலா தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: காலை உணவாக மொறுமொறுனு சுவையான சோள தோசை.. ரெசிபி இதோ!
மஸ்ரூம் மசாலா தோசை செய்ய தேவையான பொருட்கள் :
காளான் - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுகியது)
தக்காளி - 1 (பொடியாக நறுகியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சீரகம் தூள் - 1 ஸ்பூன்
சோம்பு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: டிபனுக்கு ரவையில் இப்படி ஊத்தப்பம் செய்ங்க.. ரொம்ப சூப்பரா இருக்கும்!
செய்முறை :
மஸ்ரூம் மசாலா தோசை செய்ய முதலில், எடுத்து வைத்த காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வைத்த வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கி வைத்த தக்காளியை போட்டு வதக்கவும். அதன் பிறகு காளான் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை மற்றும் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை பொடியாக்கி அதையும் அதன் மேல் தூவி கிளறிவிடுங்கள்.
இதனை அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தடவி எடுத்து வைத்த மாவை அதில் ஊற்றி மாவின் நடுவில் தயாரித்து வைத்த மசாலாவை வைக்கவும். பின் அதன் மேல் எண்ணெய் விடவும். பிறகு தோசையை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் காளான மசாலா தோசை ரெடி.
இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D