நடிகை காஜல் அகர்வாலின், கர்ப்பமான வயிறு கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் அடித்ததற்கு, அவர் நெத்தியடி பதில் அளித்துள்ளார். தற்போது அது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தவர்.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு, அக்டோபர் மாதம், பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கமிட்டான சில படங்களில் நடித்துவந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
அண்மையில் துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டு அரசு கோல்டன் விசா கொடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, காஜல் துபாயில் பிரபல ஹோட்டலில் இருந்து அழகிய புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அதில், அவரது கர்ப்பமான வயிறு அழகாக தெரிய டைட்டான மாடர்ன் உடையணிந்து போஸ்கொடுத்தார். அதை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை குவித்து வந்தனர். ஒரு சில நெட்டிசன்கள், வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கிண்டல் அடித்து வந்தனர்.
அதற்கு, பதில் அளிக்கும் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாய்மை என்பது ஒரு வரமாகும். எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் எனது பணி போன்றவற்றை நான் மிகவும் லாவகமாக கையாண்டு வருகிறேன்.
கர்ப்ப காலத்தில், பெண்கள் பலருக்கு நம் உடல் எடை அதிகரிப்பு உட்பட பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் குழந்தை வளரும்போது நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாகி, நம் உடல் குழந்தைக்கு பாலூட்டுவதற்குத் தயாராகிறது. சிலருக்கு நம் உடல் பெரிதாக, ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் நம் வழக்கத்தை விட மிகவும் சோர்வாக இருக்கலாம் மற்றும் இதனால் நமக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். இவை நமக்கு பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தும்.

மேலும், பிரசவத்திற்குப் முன்பு, நாம் இருந்ததைத் திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் அல்லது சில சமயங்களில் கர்ப்பத்திற்கு முன்பு நாம் எப்படி இருந்தோம் என்பதை முழுமையாக திரும்பப் பெற முடியாத சூழ்நிலை நிகழும். இருப்பினும், இந்த மாற்றங்கள் அனைத்தும் இயற்கையானவை ஆகும். கர்ப்பிணிகள் நம் வாழ்வின் இது போன்ற மிக அழகான, தருணத்தில், நாம் சங்கடமாகவோ அல்லது மன அழுத்தமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தையை சுமக்கும் நாம் பாக்கியம் கொண்டவர்கள்.
இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, நான் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அது எனக்கு உதவியாக இருக்கிறது என்றார்.
