கே.சி பழனிசாமி செய்தது என்ன ..? அதிரடி கைதுக்கான பகீர் காரணம் இதுதான்..!

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கோவையில் அதிகாலையில் கைது: 11 பிரிவுகளில் வழக்கு அதிகமுவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கோவையில் இன்று அதிகாலை ைகது செய்யப்பட்டார். 

அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் கே.சி. பழனிசாமி.  நாமக்கல்லின் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற எம்.பி.யாக கடந்த 1989ம் ஆண்டு தேர்வானார்.  இவர் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி

  
இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்திருந்தார். இதனால் கட்சி விரோத நடவடிக்கைக்காக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து 2018-ம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி நீக்கப்பட்டார். 

இதைத் தொடர்ந்து அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் அதிமுகவில் மீண்டும் சேர்ந்து விட்டதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேசி பழனிச்சாமி அறிவித்தார் ஆனால், இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ேக.சி பழனிசாமி பயன்படுத்தி வந்ததாக  புகார் எழுந்தது. மேலும், அதிமுக பெயரில் தனியாக இணையதளமும் நடத்தியதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, சூலூர் முத்துகவுடன்புதூர் ஊராட்சி தலைவர் கந்தசாமி, கே.சி பழனிசாமி மீது போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரில் அதிமுக சின்னத்தை பயன்படுத்துதல், தனியாக இணையதளம் நடத்துகிறார் என்று தெரிவித்திருந்தார். 

இந்த புகாரை தொடர்ந்து கோவை லாலிரோட்டில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் அதிகாலை 4 மணிக்கு சென்ற போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். கே.சி பழனிசாமி மீது  ஏமாற்றுதல்,நம்பியவர்களை ஏமாற்றுதல்,ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்,தவறான ஆவணத்தை உருவாக்குதல், தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்குப்பபதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.