வீட்டை விட்டு கிளம்பும் போது...வெற்றியை நிர்ணயிக்கும் சகுனங்கள்...! 

சகுனங்கள் பல இருக்கின்றன. அதில் சுப சகுனங்கள்.. அசுப சகுனங்கள் இருக்கின்றது அல்லவா? அவை என்னென்ன என்பதை இப்போது
பார்க்கலாம்.

சுப சகுனங்கள்:

பசு, ரத்தினம், மலர், தயிர், யானை, குதிரை,எரியும் அக்னி, காளை,  தாமரை, சந்தனம், தானியங்கள், பிணம், வேஷ்டி, வெள்ளை, மாலை சலவை துணி, குழந்தையுடன் உள்ள பெண், கன்றுடன் கூடிய பசு, சங்கு, வாத்திய ஓலி, மாமிச துண்டு, நெய், பால் இவை எதிரில் வந்தால் உத்தமம்.

வாழ்க, நன்றாக இரு, செல்வாய், புறப்படு முதலிய ஓலி வருமானால் ஆகச்சிறந்தது.

அசுப சகுனங்கள்:

எண்ணை தேய்த்து கொண்டவன், தலைமுடி விரித்துப்போட்டு இருப்பவன், சடைமுடியை உடையவன், ஊர் சுற்றுபவர், சிவந்த மலர், ஈரத்துணி, உப்பு, பன்றி, வலது கால் தடுத்து நிறுத்துதல், அழுகை, பாம்பு, முயல் இவை எதிரில் வரலாகாது. நீ எங்கே போகிறாய் என்ற கேள்வி ஒலி ஆகாது.

பூனை பாம்புகளை கண்டால் ஆறுமாதம் பிரயாணம் செல்ல கூடாது. தும்பல் சப்தம் கேட்டால் எந்த நல்ல செயலையும் தொடங்க கூடாது.

இவ்வாறு அந்த காலத்தில் சகுனங்களை வரையறை செய்து, அதன்படி வாழ்க்கை முறைகளில் பின்பற்றி வந்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்று இதை எல்லாம் நாம் நினைத்து கூட பார்ப்பது இல்லை அல்லவா..?