இவ்வளவு ரிஸ்க் எடுத்து யோகா செய்யும் பிரபலம்  யாருன்னு கண்டுப்பிடிங்க பார்க்கலாம்...! 

உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்யமாகவும் வைத்துக்கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். அதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வதும், யோகா செய்வதுமாக இருக்கின்றனர்.

இன்னும் ஒரு சிலர்.. அதாவது வேலைக்கு செல்பவர்கள் நேரமின்மை காரணமாக உடற்பயிற்சியும் செய்வவது இல்லை.... யோகாவும் செய்வதில்லை. ஆனால் பிரபலங்கள் அப்படியா என்ன..? அதுவும் சினிமா துறை என்றால் சொல்லவா வேண்டும்..? தங்களை அழகாக வைத்துக்கொள்வது தானே இவர்களின் முக்கிய வேலை ...


 
அந்த வகையில் இயக்குனர் அட்லீயின் மனைவி தான் இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து யோகா செய்கிறார். ராஜா ராணி,மெர்சல், பிகில் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வித்தியாசமான கதை அம்சத்தோடு படம் எடுத்து வருபவர் அட்லீ . இவரின் மனைவி பிரியா பார்ப்பதற்கு சினிமா நடிகைகளை மிஞ்சும் கொள்ளை அழகு கொண்டவர். 

எப்போதும் சிரித்த முகத்தோடு, பொலிவுடன் இருப்பதற்கு என்னதான் காரணமோ என யோசித்தால் அதற்கான விடை இவர் செய்யும் யோகா முறையை பார்த்தே தெரிந்துகொள்ளலாம். 

பிரியாவின் இந்த யோகா செய்யும் படம் தான் தற்போது  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக யோகா செய்வது என்றாலே தரையில் அமர்ந்து ...மெதுவாக உடலை  அசைத்து செய்ய கூடியதாக பார்த்து இருப்போம். ஆனால் யோகாவில் இருக்கக்கூடிய கடினமான முறையில் ப்ரியா செய்யும் யோகாவை பார்த்து அனைவரும் மெய் சிலிர்க்கின்றனர்.