தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர்,சுற்றுச்சூழல் என்ஜினீயர் உள்ளிட்ட  பல்வேறு பணியிடங்களுக்காக 224 பேர்  வரை தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு  வெளியாகி உள்ளது. 

காலி பணியிட விவரம்: 

மொத்தம் : 224 பேர்  தேர்வு செய்ய திட்டம்

உதவி என்ஜினீயர் - 73, ஆராய்ச்சியாளர்(researcher ) - 60, உதவியாளர்(Assistant  ) - 36, டைப்பிஸ்ட்(typist ) - 55

வயது வரம்பு

30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் டைப்பிஸ்ட் பணிக்கு மட்டும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

கல்வித்தகுதி: ஆராய்ச்சியாளர் பணிக்கு!

வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் போன்ற அறிவியல் படிப்புகளில்,  முதுநிலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதே போன்று உதவி என்ஜினீயர் பணிக்கு எம்.இ, எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மற்ற உதவியாளர் பணிக்கு, பட்டப்படிப்புடன் உயர்நிலை தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும் முறை

வரும் 23 ஆம் தேதிக்குள் www.tnpcb.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.