job oppurtunity in eb

உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான இன்டர்வியூ வெளிப்படையாக நடைபெறும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது .

அதாவது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு மார்ச் 13 ( இன்று ) முதல் 18 ஆம் தேதி வரை ,வண்டலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெறுகிறது .

6 நாட்கள் நடைபெறும் இந்த நேர்முகத்தேர்விற்காக, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக , நேர்முகத்தேர்விற்கு செல்லும் முன், நம்மை தேர்வு செய்பவரை குழுக்கள் முறையில் நாமே தேர்வு செய்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .