ஜியோ அதிரடி..! நம்பர் 1 இடம் பிடித்தது மட்டுமல்ல... இப்படி பல ஆபர் கூட இருக்கு...!

Reliance jio சந்தைக்கு வந்த பிறகு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜியோ அறிமுகமானது. அப்போது மிகவும் பயன்பாட்டிலிருந்த ஏர்டெல் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனத்திற்கு பெரும் சவாலாக இருந்தது ஜியோ.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மற்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஜியோ நிறுவனம், தொலைத் தொடர்பு நிறுவன சந்தையில் முதல் இடத்தை பிடித்து உள்ளது. அதன்படி பார்த்தால் ஜூன் முடிந்த காலாண்டில் 33.1 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இணைய சேவையில் ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் ஜியோ வந்த பிறகு பின்னுக்கு தள்ளப்பட்டது. மேலும் ஜியோ இணைய சேவை வழங்குவதில் மிகவும் திருப்திகரமாக இருந்ததால் மக்கள் ஜியோ பயன்பாட்டை அதிகம் விரும்பினர். 

jio உடனான போட்டியை சமாளிக்க ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனம் ஒன்று சேர்ந்து 42 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது. இருந்தபோதிலும் தற்போது முடிந்த ஜூன் வரையிலான காலாண்டில் 891 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது ஜியோ. அதேவேளையில் வோடபோன் ஐடியா நிறுவனம் 4,874 கோடி நஷ்டம் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேலும் பல புதிய சலுகைகளை வழங்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.