ஜியோ அடுத்த அதிரடி..! இப்போதே குஷியான வாடிக்கையாளர்கள்..! 

ஜியோ அறிமுகப்படுத்தபட்ட நாள் முதல் இன்று வரை பல அதிரடி திட்டங்களையும், மக்களுக்கு தேவைக்கு அதிகமான டேட்டாவையும் வழங்கி அசத்தி வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகளுக்கே சவால் விடும் வண்ணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் 5 ஜி சேவை வழங்க இப்போதே அஸ்திவாரம் போட தயாராகி விட்டது ஜியோ.

இதற்கு தேவையான சாதனங்களை பெறுவதிலும் சரி, 5 ஜி சேவையை பயன்படுத்தக்கூடிய பண்புகள் கொண்ட புதிய தொழிநுட்பத்துடன் கூடிய மொபைல் போனை அறிமுகம் செய்ய ஜியோ முடிவு செய்து உள்ளது. அதுமட்டுமல்லாமல், இதற்காக மொபைல் போன் உற்பத்தியாளர்களிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது ஜியோ.

5ஜி சேவையை இந்த ஆண்டே சில நாடுகளில் பயன்பாட்டிற்கு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, சீனாவில் இந்த ஆண்டில் சேவை துவங்கும் என பேச்சு அடிபடுகிறது

5ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் ஜூலை மாதத்தில் துவங்கும் என்றும், இந்த சேவையை ப்ளாக்க்ஷிப் சாதனத்தில் மட்டும் பெற முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் பட்ஜெட் விலை போன்களிலும் 5ஜி சேவையை திறம்பட வழங்க ஜியோ அதிரடி முடிவை எடுத்து அதற்கான அனைத்து பணிகளையும் செய்ய தொடங்கி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களான சாம்சங், ஹூவாய், எல்.ஜி போன்ற நிறுவனங்களும் 5ஜி சேவையை பயன்படுத்தும் தொழிநுட்பத்துடன் கூடிய சிறந்த மொபைல் போனை அறிமுகம் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது.