வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்காகவே ஜியோ செம்ம சூப்பர் சலுகையை அறிவித்து உள்ளது.
நாட்டில் நிலவி வரும் கொரோனா  தீவிரத்தை கருத்தில் கொண்டு நாடே முடங்கி உள்ளது. இந்த ஒரு நிலையில் யாரெல்லாம் வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு உள்ளதோ அவர்கள் அனைவருக்குமே ஏதுவாக இன்டர்நெட் சேவையில் சலுகை வழங்க ஜியோ முடிவு செய்து உள்ளது .

அதன் படி,

ரிலையன்ஸ் ஜியோ தனது 4G டேட்டா திட்டங்களான ரூபாய் 11, 21, 51 மற்றும் 101 ஆகியவற்றுக்கு இரண்டு மடங்கு டேட்டாவும் கால்களுக்கான off-net நிமிடங்களையும் கூடுதலாக வழங்குகிறது.

அதன் படி, ரூபாய் 11- க்கான 4G டேட்டா திட்டடத்தில் 800MB அதிவேக 4G டேட்டா வழங்கும்.ரூபாய் 21-க்கான திட்டடத்தில் 2GB அதிவேக 4G டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு கால் செய்ய கூடுதலாக 200 நிமிடங்கள் கம்பெனியால் வழங்கப்படுகிறது.

ரூபாய் 51- க்கான 4G டேட்டா திட்டடத்தில் 6GB அதிவேக டேட்டா மற்றும் ஜியோ அல்லாத மற்ற எண்களுக்கு கால் செய்ய கூடுதலாக 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

கடைசியாக ரூபாய் 101-க்கான திட்டத்தில் 12GB அதிவேக டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு கால் செய்ய கூடுதலாக 1000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த சேவைகளை  பெறுவதற்கு நாம் ஏற்கனவே  வைத்துள்ள திட்டத்திற்கு ஏற்ப கால அவகாசம் மாறும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால், உங்களுடைய அடிப்படைத்திட்டம் மற்றும் 4G டேட்டா திட்டமத்திற்கான நிமிடங்கள் முழுவதுமாக பயன்படுத்தி முடித்து விட்டால், ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பித்தக்கது.

இந்த அற்புத சேவையை பயனப்டுத்திக்கொள்ள விருப்பம் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் உடனடியாக my  jio செயலியில் விவரமாக உள்ளது. செக் பண்ணிக்கோங்க ... வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இது  பேருதவியாக இருக்கும்.